HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Thursday, January 13, 2011

கலைஞரின் மரண அறிவித்தல்!

கறுப்புக் கண்ணாடிபோட்ட
கல் மனிதனே!
பொய்கள் கண்ணில்
புலப்பாடுமென்றா
கண்களை மறைக்கிறாய்?

கலைஞர் இருந்தும்-எல்லாம்
எமக்கு எதிராய் நடந்தது!
புரட்சித் தலைவர் இருந்திருந்தால்
இதற்கு எதிர்மாறாய் இருந்திருக்கும்!

மத்தியில் பங்குண்டு!
மாநிலத்தில் ஆட்சியுண்டு!
இத்தனையும் இருந்தன்று!
எம்தலையில் வெடிகுண்டு!

அபிவிருத்தித் திட்டங்கள்
அறிவித்ததும் ''மத்தியால்''!
மறந்துவிட்டீர் எங்களை
பணம்சேர்க்கும் புத்தியால்!

இராமச்சந்திரன்(MGR) இருந்திருந்தால்
ஈழச் சந்திரனும் சிரித்திருக்கும்!
இந்திரனாய் இருந்தும்கூட
ஈழம் இருளாக இருக்கிறதே!

மொழிப்பற்று மட்டும் போதாது
இனப்பற்றும் வேண்டும்-இவை
இரண்டும் இருந்தால்தான் தமிழன்!

பதவி பரிபோனாலுமேன்று
பாராமுகமாய் இருந்தீறென்று!
வரலாறு சான்றுபகரும்நின்று!

காந்திவழியில் விடுதலை வென்றீர்
எமக்குயேன் ஆயுதம்தந்தீர்?
காந்தியுங்கள் தந்தைஎன்ரீர்
திலீபனையேன் கொன்றீர்?

ஒட்டுத்துணியின்றி கைகளால்
மானம்காத்துக் கதறுது
எம்தமிழ் அன்று!
ஓட்டநின்று கிரீடம் சூட்டினார்
செந்தமிழென்று!


-2009
''வாழ்க எம் தேசம்''

யாழ் சங்கர்-கவிதைகள்


புலம்பெயர்ந்த புறாக்களே!

புலம்பெயர்ந்த புறாக்களே!

உலகப் படத்தில்
உங்கள் கூடுகள்!
உடைந்தது இங்கே
உங்கள் வீடுகள்!

கடந்தது கடல்கள்
உங்கள் சிறகுகள்!
தவிக்குது இங்கே
உங்கள் உறவுகள்!

வெளிநாட்டில் இருந்தாலும்
வெள்ளையன்போல் வாழ்ந்தாலும்
தாய்நாட்டில் கொண்டகாதல்
மாறவில்லை இன்றுவரை!

மறந்திடுமா....?
வீட்டில் தம்பியோடு
விளையாடிய நாய்க்குட்டி!
கூட்டில் தங்கையோடு
கதைபாடிய கிளிக்குஞ்சு!

ஆட்டுக் குட்டியை
அனைத்த புகைப்படம்!
கனவிலே அணையா
இரவுப் புத்தகம்!

ஓலை வேலிக்குள்
ஒழிந்த ஓணான்கள்!
மழையே இன்றி
அழிந்த காளான்கள்!

சேற்றில் இருந்தாலும்
சிரித்த தாமரை!
ஆற்றில் கவிழ்ந்த
கடதாசிப் படகுகள்!

இன்று...
சொந்த ஊருக்கே
சுற்றுலா பயணிபோல்!
வந்து போகிறீர்
வார்த்தைகள் தொலைத்துவிட்டு!

''வாழ்க எம் தேசம்''

யாழ் சங்கர்-கவிதைகள்

Wednesday, January 12, 2011

ஈழத்து இளைஞர்களே....


இதையும் செய்தால் இன்னும் நன்றே...!

இளைய தமிழினமே
எதிர்கால சரித்திரமே!

இனத்துக்காய் ஏதும்
செய்யத்துணியுங்கள்!
இதயத்துக்குள்ளே
தமிழை திணியுங்கள்!

வெள்ளையன் வருமுன்
இருந்த ராட்சியத்தை
இன்று கேட்கிறோம்
இதிலென்ன தவறு காண்?

வரலாற்றை சான்றுவை
சட்டை பிடியாதே!
நேரம் வரும்வரை
சிரித்து விலகிநட!

இனப்பாசாங்கு செய்பவனை
பகுத்தறி!பரைசாற்ராதே!
வெற்றி வரும்வரை
பற்றி எறியாதே!

ஆயுதம் மறை
அகிம்சை போதி-அதை
எறிந்துவிடாதே.

உண்மை துலக்கி
உரிமை விளக்கு
ஒருவனுக்கேனும்!

இனத்துரோகிகள் குறைக்கட்டும்
கல்லேடுக்காதே!சொல்தொடுக்காதே-அது
எச்சில் எலும்புத்துண்டுக்கு விசுவாசம்!
மௌனமாய் திரி! மனதுக்குள் சிரி!

இயல்-இசை-நாடகம்
இவை இன்னல் விளக்கும்
உன்னத ஊடகம்!
இதில் ஒன்றையேனும் எடு!


எவரும்...
எதிரிக்கு எதிராய்-சிறு
கல்லையேனும் எரியவில்லையா?
கட்டாயப் படுத்தவேண்டாம்!
சொற்காயப் படுத்தவேண்டாம்!
தானாய் வரும்வரை
தவிர்ப்பாய் வன்முறை!

வருவான்...
வந்துதானகவேண்டும்!
நொந்துதானகவேண்டும்!
அன்று சொல்லிக்கொடு-அவன்
கையில் கல்லைக் கொடு!

சிறுக சிறுகப் பேசி
சிநேகிதம் கொள்-சில
சிலந்திகள் இருக்கும்
கவனத்தில் கொள்!


உலக ஊடகத்தை நண்பனாக்கு
ஒட்டி ஒட்டி உள்ளே நுழை!
படி தொட்டியெங்கும்-தமிழன்
பட்டதுன்பம் பறைசாற்று!

அழிவைக் காட்டி
அனுதாபமெடு-பின்
அதையே தீட்டி
அறிவாளாயெடு!

விடுதலை விதைக்கையில்-சில
களைகளும் சேர்ந்துவரும்
விலக்க நினைத்தால்
வேர்களும் காயப்படும்
உரமிடுமுன் களைபிடுங்கு!

பணக்காரன்....
பொறுத்த நேரத்தில்
போகும் மின்சாரம்
ஏழை உயிரை உருக்கி!
உதவும் மெழுகுவர்த்தி!
ஏற்றத்தாள்வின்றி!
பழகிடுவொன்ரி!

அர்த்தமில்லா அறிவுரையா?
மணிபார்க்கத் தெரியா
மனிதனாயிரு!
புருவமுயர்த்தி புரிந்ததுபோல் நாடி!

விட்டுக் கொடு
விலைபோகாதே!
தங்கம் தந்தாலும்
தள்ளாடாதே!

தெரியாத மாற்றார்க்கு
தெளிவு படுத்து!
உரிமையுள்ளதென்று
உறுதியோடு உரை!
கண்ணீர்வரை கண்டதைகூறு!

வரலாற்றை வாளாக்கு
கூராக்கு!குத்திவிடாதே!
வழக்காடு வெள்ளையன்
தவறென்று வெட்டிமுடி!

தொடரும் ...


''வாழ்க எம் தேசம்''

யாழ் சங்கர்-கவிதைகள்

என் கிராமத்து நண்பனே...!

ஆற்றங்கரை ஆலமரம்-இன்றும்
எம்பெயர்கள் சுமக்குமா-நாம்
ஊஞ்சல் ஆடியவிளுதுகள் -இன்று
வேர்களாயிருக்குமா?

பள்ளியால் வரும்வழியில்
அடிக்கடி அலறி ஓடவைத்த-அந்த
கட்டைவால் கறுத்தநாய்
கலைத்தது நினைவிருக்கா?

அந்தப் புல்வெளி பூவரசு
பூத்துக் குலுங்குவதும்
புளியமரத்தில் பேயென்று
புரளிகிளப்பியது நினைவிருக்கா?

ஆற்றங் கரையில் நாம்
அடித்த கூத்தும் -நீரில்
அடிபட்டுப்போன அந்தரங்க
ஆடைகள் நினைவிருக்கா?

வகுப்பறைக் கதிரைகள்-பெயரை
சுவடுகளாக சுமக்குமா?
கழிவறைச் சுவரில்
கணக்கு வாத்தியின்
சித்திரம் இருக்குமா?.

தேய்ப்பிறை சிறு ஒளி!
முற்றத்து வேப்பமரம்-சுகமாய்
தூங்கிய இரவுகள்
எத்தனை எத்தனையோ?

சைக்கிள் பழகிய-அந்த
சாலைகள் நினைவிருக்கா?
சறுக்கி விழுந்த
காயத்தின் தளும்பிருக்கா?

எச்சில் பார்க்காமல்
புசித்த புளியம்பழம்!
இன்று நினைத்தாலு
உடம்பெல்லாம் எச்சிலுறும்!

பதுங்கு குழியில் நாம்
படித்தபோதும்-இன்று
பட்டதாரிக் கனவுகள் 
பலித்ததே நண்பா...

யாழ் சங்கர்

அந்த அதிகாலையில்!

அதிகாலைப் பூக்கள்-அன்று
இறைவனுக்காக காத்திருந்தது!

அந்த அதிகாலையில்!
அயலவர்களின் சேவல்
அலாரமாக வானம் வரை எட்டியது

சிலவீட்டு முற்றங்கள்
நீர்தெளித்துக் கூட்டப்பட்டது
கோலம் போடுவதர்காய்!

முணுமுணுத்த பாட்டோடு
மாட்டு வண்டிகள்
தோட்டங்கள் நோக்கி நகரும் சத்தம்
தலையணைக்குள் தலைபுத்தைத்தும்
கேட்டுக் கொண்டே இருந்தது!

பள்ளிக்கு நாம் தயாராகையில்
பாணுக்கு பச்சைமிளகாய் சம்பல்
பாசத்தோடு பரிமாறத் தயாராகும் அம்மா.

வீட்டில் மொத்த உறுப்பினர்கள்
முப்பதிர்ற்கும் மேல்!
எழு மனிதர்கள்-மீதி
விலங்குகளும் பறவைகளும்.
இதற்க்கெல்லாம் தல-தளபதி  அப்பாதான்.

அம்மா கொடுத்த தேநீர்ச்சூடு
ஆறிப்போனாலும்
பத்திரிகையின் சூடு ஆறுமுன்
படித்துமுடிக்கும் அம்மப்பா!

காக்கை வாயிலுள்ள வடை
வீழாதா எனப்பார்த்த நரிபோல்!
தாத்தா கையிலுள்ள பத்திரிகைக்காய்
பார்த்திருக்கும் அம்மம்மா!

எங்கள் கிணற்றுக்கு வந்தவர்கள்.
கண்டங்கள் தாண்டும்வரை
கத்திச் சொல்வார்கள்-அன்று
இரவு நடந்த விடுப்பு விண்ணான செய்திகளை !

மாசத்து முப்பது நாளும்
சைக்கிளையே சுற்றிச் சுற்றி
சரிசெய்யும் தம்பி...!

கண்ணாடிக்கே களைக்கும் வரை
சரிபார்த்து.
பக்கத்து தோழிக்கும் சேர்த்து
பாசல் செய்யும் அக்கா!

கதவு உடையும் வரை தட்டினாலும்
கட்டிலிலோ அல்லது களிவறையிலோ
தூங்கிக் கொண்டிப்பேன் நான்....! I'm Paavam''

வகுப்பறை....!

வகுப்பறை எமக்கு இன்னுமோர்
கருவறை!கல்லூரித்தாயின்!

உள்ளே இருந்தபோது
உலகம் தெரியவில்லை!
வெளியே வந்தபோது
வேதனைகொஞ்சமில்லை!

இப்படிவளிக்குமென்று-அன்று
தெரியவில்லை!
இதயம் கொல்லுமேன்று -அன்று
புரியவில்லை!

தள்ளாடும் வயதிலும்
தாலாட்டும் நினைவுகள்!
வகுப்பறை நினைவுகள்
நீங்காத சுவடுகள்!

தொடரும்...

Tuesday, January 11, 2011

நாம் இறுதியாய் சந்தித்தபோது(wen we met finally)

நாம் இறுதியாய் சந்தித்தபோது
மேகம் சிரித்தது! முகத்திலும்!

பேசிக்கொண்டபோது இடையிடையே
இடி இடித்தது! இதயத்திலும்!

பிரிவின் வழியை பகிர்ந்ததோது
மெதுவாய் தூரத்தொடன்கியது!கண்ணிலும்!

என்கண்ணீரை மறைத்துக் கொண்டது
மழைத்துளிகள்-ஆனால்
அவள் முகத்தில் என்னவோ????


யாழ் சங்கர்

அர்த்தமுள்ள கண்ணீர்த்துளிகள்...!

அர்த்தமுள்ள கண்ணீர்த்துளிகள்...!

தங்கை மகிழ்ந்தாள்!
தம்பியும் மகிழ்ந்தான்!
முற்றத்து மரத்தில் ஒரு குருவிக்கூடு.

அருகில் சென்றால் அமைதி காப்பாள்
அடைகாக்கும் குருவி பறந்தாலுமென்று.

மழை பெய்தாலும் ஓடி
மரம் நோக்கிப் பார்ப்பாள்
மழையால் ஏதும் நடந்தாலுமென்று .

விளையாடுவதுகூட
தவிர்த்தாள் நிணலில்!
வீட்டார் சத்தம்
எதிர்த்தாள் அருகில்!

பதுங்கு குழியில்
நாங்கள் பதுங்கிய போதும்,
குருவிக் குஞ்சுகள் பற்றியே
பதறுவாள் தங்கை.

புயல் காற்றில் கூட
சரியவில்லை.
இடி மழையில் கூட
கலங்கவில்லை.

குண்டு மழையில்
கூடு எரிந்தது.
குஞ்சுகள் கருகி
தரையி விழுந்த்தது.

இறுதித் துடிப்பில்
என்ன நினைத்தது
என்று எனது
உள்ளம் துடித்தது.

சுயநலமாய்....
ஆஸ்த்தியை நினைத்து அம்மாவும்
அந்தஸ்த்தை நினைத்து அப்பாவும்
எதை எதையோ நினைத்து
அழுது புலம்பியது உறவுகள்.

ஆனால்...
இரத்தமுள்ள குஞ்சுகள்
தங்கை கைகளில்.
அர்த்தமுள்ள கண்ணீர்த்துளிகள்
அவள் கண்களில்! கண்களில் மட்டுமே....!

2009.03
''வாழ்க எம் தேசம்''

யாழ் சங்கர்-கவிதைகள்

என் தாய் மண்ணில்....

புறப்பட்ட இன்பம்
அடைந்ததும் இல்லை-என்
தாய் மண்ணில்.

அங்கே....
குடிசைகள் குறைகிறது
கல்லறைகள் குடியேறுகிறது....!

வரவேற்பு பதாகையில்
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி..!

விதவைக் கோலத்தில்
தோழிகள்!
வீட்டு முற்றத்தில்
பதுங்கு குழி!

நண்பனை வினாவியபோது
குனிந்ததலை நிமிர்ந்த தாயின் முகத்தில் கண்ணீர்...!

அன்று நண்பர்களோடு....
மாலையில் பறவைகளாய் ஒன்று சேர்ந்த
குட்டிச்சுவர், வேப்பமரம்!
வெட்டு-வேட்டுக் காயங்களோடு...!

அங்கு...
பறவைகள் இல்லை
வேட்டு சத்தங்களால்
விரட்டியடிக்கப் பட்டதுவோ?

அதிகாலை ஊர் அடைந்ததும்
அழைத்துப் போக யாருமில்லை
ஊரடங்கு முடியவில்லையாம்...!

பாடசாலைச் சீருடையில்
பாண் வேண்டிப்போகும் சிறுமி
எனக்குப் புதுமுகம்-ஆனால்
அறிந்த முகத்தின் சாயல்.

நண்பர்கள் வீடுசெல்ல
எனது வீட்டில் அனுமதியில்லை!
பார்த்துப் பழகிய
பழைய முகங்களை பார்க்க முடியவில்லை
நினைவிலும் மீட்டக முடியவில்லை.

மூலை முடுக்கெங்கும் காவலரண்கள்பாதுகாப்புப் படைகள்-ஆனால்
எனது பாதுகாப்புக்கு பயப்படும் உறவுகள்
விந்தை விளங்கவில்லை எனக்கு?

எனது மண்ணில்...
எனது ஊரில் ஏன் இப்படி?
மதியமாகியும் வீதியில் எவருமில்லை.
வேலைக்கு சென்றார்களோ?
வெளிநாடு சென்றார்களோ?

வீதியை வெறித்துப் பார்த்தபடி-அவர்கள்
காணாமல் போவதரியாது சிந்தனையில் நான்!!!!

பிள்ளையார்கோவில் தாத்தா இல்லை!
கடலைவிற்ற (கடனாகவும்) பாட்டியில்லை!
கோவில் மதிலுடைத்துக் கட்டிய காவலரண்.

அசைக்கமுடியாமல் இறுகிப்போன
கோவில் மணி-அன்று
அலாரமாய் படிக்க உதவியது ஞாபகத்தில்..!

அன்று...
பாட்டியின் மரணச்சடன்கிலும்-எனை
சிரிக்க வைத்த நண்பன்!
மாதாகோவில் திருவிழாவில்-போலி
மணிக்கூடு திருடியது!
பட்டாசு வேண்ட
பால்கறந்து விற்றது!
சுடலை கடந்து-அவன்
வீடு செல்லப் பயந்து
பாடிக்கொண்டே கடந்த்தது!
இவைகளை நினைவில் மீட்டபடி
நண்பனின் வீடு நோக்கி நான் ...!

சுடலை நெருங்கியது...
இடையில் எதோ பார்வையில்
அடிக்கடி உச்சரித்த பெயர்...?

அது... சூட்டுக் காயங்கள் பட்ட
சிறு சுவர் தெளிவில்லை.
உற்றுப் பார்த்தபோது
ஒருகணம் என்னிலை மறந்தேன்
அகால மரணமென அவன் பெயர் கல்லறையில்.
அதுவரை யாருக்காகவும் அப்படி அளுததில்லை.... தொடரும்


யாழ் சங்கர்

ஈழத்தில்...

 

 

 

 

 

ஈழத்தில்...

in facebook by Shangaa Shankar on Tuesday, 28 April 2009 at 11:51
தந்தை இறந்தான் - தாய்
வாழ்வின்றி அழுதாள்!


தாய் இறந்தாள் - தங்கை
பாலின்றி அழுதாள்!

ஆனா
ல்...
தாய்சுமந்த தங்கை-அன்பு
அண்ணன் மடியில்.

தன்...
தந்தைசுமந்த துப்பாக்கி-அந்த

அண்ணன் பிடியில்....

யாழ் சங்கர்


காலத்திடமே பதில்!

 on Tuesday, 08 December 2009 at 05:37 
காலத்திடமே பதில்!
...................................

எது உண்மை?
எது பொய்மை?
எதுவுமே புரியவில்லை....!

எது காதல்!
எது ஈர்ப்பு!
அதுவும் எனக்கு புரியவில்லை....!

உண்மைக் காதல் ஒருமுறை என்றார்கள்-அது
அது முதலா?இடையிலா?முடிவிலா?
இதற்க்கு யாரிடமும் பதிலில்லை...!

ஒரு இதயம் வென்றவனுக்கு-அதுதான்
உண்மை! உயிர்! வாழ்க்கை...
பல இதயம் பார்த்தவனுக்கு-எதுதான்?
உண்மை! உயிர்! வாழ்க்கை...???

காரணம்...
பல இதயம் பார்த்தவன் பகுத்தறிவான்-ஆனால்
ஒரு இதயம் பார்த்தவன் என்ன செய்வான்???

வெளிப்படியாக சிலர்...
இதுதான் முதல் காதல் எனச்சொல்ல
முயற்சிப்பதில்லை-அனால்
இதுதான் கடைசிக் காதல் எனச்சொல்லவும்
முடிவதுமில்லை...! ஏன்?

அனால் அந்த நொடிகளின்
அன்பு! தவிப்பு! கண்ணீர்!பரிசம்!பார்வை!..etc
உண்மையானவை...
அதுதான் உண்மை!
இதை மனச்சாட்சி உள்ள எவரும்
மறுதலிக்க மாட்டார்கள்...

பறவைகள் அப்படி இல்லை...
மிருகங்களும் அப்படி இல்லை-ஏன்
மனிதன் மட்டும் இப்படி?

பறவைகள்!
பறவையாக வாழுகிறது!
மிருகங்கள்!
மிருகங்களாக வாழுகிறது!
மனிதன்????????????????

எவர்கையிளுமில்லை பதில்!
இதற்க்கு காலத்திடமே பதில்...

யாழ் சங்கர்


(தொடரும்)

தினம் தோறும்


சுடும் வெயில் தகரம் படுக்கையாக,
உயிருக்கு போராடும் ஒருவன்
உயிர் போன இன்னொருவன்
கண்நீர்வடித்தபடி காத்திருக்கும் மீதி உறவு ,
இதுவே எமது வாழ்கை....தினம் தோறும்
Added 25 February 2009 · ·

விடுதலை பூக்கும் ....

Sunday, 26 April 2009 at 13:45 | Edit note | Delete

கடலில் எறிந்த்தாலும்
வெற்றுத் தரையில் துயின்றாலும்
பதவி பத்துத் தந்தாலும்
கொண்ட கொள்கை மாறாது
மானமுள்ள தமிழர்க்கு ...


இரத்தம் படிந்த ஆடைகள்
கண்ணீர் வடிந்த முகங்கள்!


கூடுகள் இல்லா பறவைகள் நாம்
கூரைகள் இல்லாத வீடுகளாய்
காடுகள் சேர்ந்தோம் மிருகங்களாய்...
அகதிகளானோம் அடிமைகளாய்...


காலம் ஒருநாள் மாறும்-எம்
கண்ணீரும் ஒருநாள் தீரும்
வானம் மெதுவாய் தூவும்
எம் தேசமெங்கும்
விடுதலை பூக்கும் ...


.யாழ் சங்கர்

எனது வேதனை எழுத்துக்கள்....

Monday, 27 April 2009 at 13:32 | Edit note | Delete

உணர்வுகள் இன்று கண்ணீராகவே
கன்னம் வழியாக கடந்து போகிறது...

இணையச் செய்திகள் பார்த்து பார்த்து
துடிக்குது உள்ளம்...பின்னர் படிப்பது எங்கே...

நூலகத்தின் அமைதியிலும்
அடுத்த பக்கத்துக்கு நகரவில்லை
ஆதே பக்கத்திலே தங்கி இருக்கிறது பார்வை
உள்ளம் மட்டும் தாய்மண்ணில்
தள்ளாடித் தள்ளாடித் தேடுகிறது உறவுகளை...

உள்ளத்தில் உறைந்த உறவுகளை
காலத்தால் தொலைத்து விட்டு
கண்ணீரால் தேடுகிறேன்-இங்கு
நான் மட்டும் விதிவிலக்கல்ல
உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும்
தேடிக் கொண்டுதான் இருக்கிறான்
நண்பனையாவது...

வானம் எமக்கு மழையாகத்
தண்ணீரை தூவினாலும்-அது
மனதளவில் தமிழர்க்கு கண்ணீர்தான்..
பூக்கள் நம்மூரில் பூத்துக்குலுங்கினாலும் -அது
ஈற்றில் தமிழர்க்கு மலர்வளையம் தான்...
இயற்கையின் அழகான அர்த்தங்கள் கூட 

மாரிப்போகிறதே தாய்மண்ணில்....

யாழ் சங்கர்

எதுவும் எமக்கு புதிதல்ல! இதுவே எமக்கு முடிவல்ல!


அழகான அந்த அதிகாலைகள்
அழிந்ததுவேனோ உண்மைதான்-ஆனால்
இல்லாமல் போகவில்லை....

அகதியாக! அனாதையாக!-அந்நியரால்
ஆக்கப்பட்டதும் உண்மைதான்
ஆனால் உறுதி இன்னும் இருக்கிறது....

அதீதமாய் நேசித்த தாய்மண்ணை
துப்பாக்கி முனக்களுக்குளும்!
சப்பாத்துக் கால்களுக்குள்ளும்!
பறிகொடுத்தது உண்மைதான்-ஆனால்
அது அந்திக்காலம் ஆகாது....

ஊருக்கு வெளியேயும்!
நாட்டுக்கு வெளியேயும்! வாழ்ந்த போதும் -நம்
உறவுகள் எண்ணி அடிக்கடி அழுததும்!
இணையச்செய்திகள் பார்த்து பதறி பதறி
இதயம் கனத்ததுவும்.....

கொன்றனர்! வென்றனர்! -என்று
ஆணவத்தின் உச்சியில் அந்நியர் ஆடிய போதும்!
கூச்சலிட்டு கேலிசெய்த போதும்- அது
இருக்காது! எதுவும் நடந்த்திர்க்காது-என
நம்மை நாமே தேற்றிக் கொண்டதுவும்....

எல்லாம் உண்மையாக போகட்டும்
பரவாயில்லை! பரவாயில்லை!.... ஆனால்
ஒன்று மட்டும் உண்மை மானத் தமிழனுக்கு

எதுவும் எமக்கு புதிதல்ல!
இதுவே எமக்கு முடிவல்ல!....யாழ் சங்கர் Saturday, 12 December 2009