HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Friday, June 1, 2012

'காதல்'-'நட்ப்பு'

ஒரு உறவு
ஆயிரம் காயம்
''காதல்''
ஒரு உறவு
ஆயிரம் சொந்தம்
''நட்ப்பு''
யாழ் சங்கர்...! so sad :-(

Thursday, February 2, 2012

யாருக்கு யார் அறுதல் சொல்வது????

முள்ளுக் கம்பிக்குள்ளே
முடங்கிப் போகிறோம்!


துப்பாக்கி முனைகளுக்குள்
துவண்டு கிடக்கிறோம்!


ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் அழகான
குழந்தைகளின் படங்கள்!பிறப்பு-இறப்பு திகதிகளோடு!


நிவாரண அரிசிக்காய்
நிறையில் நிற்கிறோம்!


ஊரடங்குச் சட்டத்தால்
அடக்கப் படுகிறோம்!


சிறைச்சாலை நாற்சுவருக்குள்
நசிங்கிப் போகிறோம்!


ஆயுத முனையில் சகோதரிகளின் 
கற்புக்கள் களவாடப் படுகின்றது!


தூக்கம் என்பது நாங்கள் 
தொலைத்தவைகளில் ஒன்று!


துக்கம் என்பது நாங்கள்
உழைத்தவைகளில் ஒன்று!


எங்கள் வீட்டுக்குள் போக
அந்நியனின் அனுமத்திதேவை!


சொத்துகள் பற்றின கவலையில்லை
சொந்தங்கள் பறிபோன கவலையே!


யாருக்கு யார் அறுதல் சொல்வது
கண்ணீரால்தான் பேசுகிறோம்!


கல்லூரி வாசலில் காவலரண்-இப்போ
யார்கேட்டது? இப்போது யாருகேட்பது?


விதவைக் கோலத்தில் தோழி-அதில் 
காணாமல்போன என் நண்பன்-அவள் கணவன்!


மீண்டும் அதே வகுப்பறையில்-அங்கே
ஒருசில கதிரைகள் வெற்றிடமாக! நிரந்தரமாக!!!!


வகுப்பறைக் கதிரைகளில் நண்பர் பெயர்கள் அன்று!
வரும்வழிக் கல்லறையில் அதே பெயர்கள் இன்று!!


வரவு டாப்பில் எனக்கு முன்னே அழைக்கும் நண்பன் பெயருமில்லை!
இரண்டுமுறை அழைத்தும் என்பெயர் எனக்கு விளங்கவுமில்லை!


மாற்றுத் துணிக்காய்
மணித்தியாலங்கள்காத்திருக்கும் ஒரு தாய்! 
மாற்றுத் துணி கொடியில் ஈரமாய்!
அவள் கண்ணும் ஈரமாய்!


திருமண அழைப்பிதழ் வருவதில்லை!
அதிக விதவைகள் எப்படி திருமணத்தில்?


நேற்று-மொட்டு அவிழ்ந்த ஈழத்துப் பூக்களும்
நைற்று-சப்பாத்துக் கால்களுக்குள் சகதியாகிறது!


இரண்டு நெருங்கிய நண்பர்களின் பெற்றோர் சந்திக்கின்றனர்!
நான்கு கண்களிலும் கண்ணீர்! வார்த்தைகள் இல்லை-அங்கே
ஆண்டு துவசப் ''பத்திரிகைகள்'' பரிமாறப் படுகின்றன!


சுற்றுலா வரும் சிங்களவன்
சுகம்தேடி அலைகின்றான் எம் மண்ணில்!


அங்காங்கே அனாதையில்லங்கள்
அதிலிருந்து வந்தவனில் நானுமொருவன்!


விசாரணைக்காய் அழைத்துச் செலப்பட்டவர்கள்
வீதியோரங்களில் மீட்கப்பட்டனர்- பிணமாக!


துன்பங்கள் தொடகிறது எம் தாய் மண்ணில்!
இன்பங்கள் இனிவருமா எம் தமிழ் மண்ணில்?


யாழ்சங்கர் கவிதைகள்

Friday, October 21, 2011

வெளிநாட்டில் நாங்கள்...



விடியும் விடியும் என்று-நாம்
தூங்காத இரவுகள் அதிகம்!

துரோகிகளின் குரச்சளிலும் 
எதிரிகளின் இரைச்சலிலும்-எப்படி
எம்மால் தூங்க முடியும்?

நிரந்தர முகவரி இல்லை!
நின்மதிகூட இல்லை!

படுக்க தாய்மண்ணில்லை
பாலூட்டும் நிலவுமில்லை!

அலைந்த இரவுகள் அதிகம்-இன்று
தேசத்தை நினைத்து அழுத இரவுகள்
அதனிலும் அதிகம்!

படுக்கை அறையில் படமாய்த் 
தெய்வங்கள் இருக்கிறதோ இல்லையோ!
எங்கள் தேசம் இருக்கிறது!

படுத்துக்கொண்டே பார்க்கிறோம்!
பார்த்துக் கொண்டே தூங்கிறோம்!

prayer வேளைகளில்
தேசத்தை நினைக்கையில்
நெஞ்ஞ்சம் கனக்கிறது!
மக்களை நினைக்கையில்
கண்ணீர் நனைக்கிறது!

பாசமிருந்தும் பகிந்துகொள்ள
நேரமில்லாத தந்தைகள் அதிகம்!

அன்பிருந்தும் அள்ளியணைக்க
அன்னையில்லாத பிள்ளைகள் அதிகம்!

வேலை! வேலை! வேலை! என்று!
காலை மாலை அறியா
குடும்பங்கள் அதிகம்!

ஆக்கிவைத்த சாப்பாடு
சூடாக்கித்தான் உண்ணவேண்டும்
பரிமாறத் தாயிலை!
வயிற்றுப் பசி ஆறினாலும்
அன்புபசி எப்போது ஆறுவது?

வேலை முடிந்து வந்தால்
தூங்கும் பிளைக்கு முத்தம்!
தாயின் வேதனை யாருக்குத் தெரியும்?
பிள்ளைக்கே தெரியாதபோது!

சோறு குறைந்திருந்தால் தான்
பிள்ளை சாப்பிட்டதாய் அர்த்தம்!
ஒருவேளை அது கொட்டியிருந்தால்?
குப்பைத்தொட்டியைத் பார்க்கும் தாய்!

பிள்ளைகளே..
பெற்றோரைப் புரிந்து கொள்ளுங்கள்!
பெற்றோரே...
பிழைகளை புரிந்து கொள்ளுங்கள்!

இந்த...
இயந்திரவாழ்க்கை எப்போது முடியுமோ!?
எம் சுதந்திரதேசம் எப்போது விடியுமோ!

செலவுகள் அதிகம் அதிகம் 
சேமிப்பும்! சிக்கனமும்!
தமிழில் மறைந்துபோன வார்த்தைகள்!

நாட்குறிப்பு போலே
இரவில் மட்டும் ஞாபகம் வரும்
இலட்சியங்கள்!

விசா இல்லை .வேலை இல்லை!
விசா இருப்பவனுக்கே வேலையில்லை!
வெளிநாட்டு வாழ்க்கை பலருக்கு
பிடிக்கவுமில்லை!

என்ன செய்வய்த்து?
வந்த செலவை வட்டியோடு
கொடுக்கும்வரை!
பசி, தூக்கம், பனி ,குளிர் இவைகளோடு
போராட்டம்தான்!

Wednesday, September 14, 2011

ஒருநாள் வரும் வந்தே தீரும்..





தமிழின உணர்வுகளை
உள்ளக் கிடக்கையில் புதைத்துவிட்டு.

நடைபிணமான எனது நண்பனே
ஒருநாள் வெடிக்கும்
அன்று நீ பேசு -கையில்
கிடைப்பதை விசு!

ஒன்றும் முடியவில்லை என்று
உணர்வுகளை அடக்கி அழுதிடும் நண்பனே.
ஒரு காலம் வரும் வந்தே தீரும்
கலங்கிடாதே அதை மறந்திடாதே.

ஆயுதங்கள் மௌனித்தோம்-தவிர
அடங்கிவிடவில்லை!
அமைதி காக்கிறோம்-தவிர
பயந்துவிடவில்லை!

எங்கள் உணர்வுகள் பெரிது
எங்கள் கனவுகள் பெரிது
ஒருநாள் வரும்
வந்தே தீரும்..

Sunday, September 11, 2011

நண்பனொருவன் கல்லறையாக!



ஊருக்கு வெளியே-நாம்
ஓடிவிளையாடிய

மைதானம் சுடுகாடாக-அங்கு
என்னோடு விளையாடிய
நண்பனொருவன் கல்லறையாக!


எங்கள் வலி எமக்கே தெரியும். 
எங்கள் கண்ணீர் யாருக்கு புரியும் .. :-(

Friday, September 9, 2011

நாங்கள் தோற்றுப் போன இனமல்ல



நாங்கள் தோற்றுப் போன இனமல்ல
ஒரு நாதியற்ற பிணமல்ல!

எதுவும் எமக்கு புதிதல்ல
முள்ளி வாய்க்கால் முடிவல்ல!

எப்படை வந்தும் எதிர்நின்றோம்
செத்திடும் வரை எதிர்கொண்டோம்!

ஆயிரம் கருணா வந்தாலென்ன!
அல்லக்கை பிள்ளையானென்ன!
KP என, டக்லஸ் என எத்தனைபேர் வந்தாலென்ன!

நாம் தமிழர் கொண்டகொள்கை
கொன்றுபோடினும் மாறிடாது!

நாம் பட்டதுன்பமேல்லாம்
அர்த்தமின்றிப் போயிடாது!

இன உணர்வால் ஒன்ரிடுவோம்!
தமிழுணர்வில் வென்றிடுவோம்

Monday, September 5, 2011

தாயுள்ளமே அன்புத் தமிழகமே




தாயுள்ளமே அன்புத் தமிழகமே
தலைவணங்கும் எங்கள் தமிழீழமே!

நீங்கள் உள்ளவரை
நாங்கள் அனாதைகள் அல்ல!

உங்கள் இதயத்தில் ஈரம்
இன்னும் இருக்கிறதே

எங்கள் கண்ணில் ஈரம்
இனியும் இருந்திடுமா?

என் உயிரிலும் உயர்ந்த
உன்னத உள்ளங்களே!

உங்கள் உதவிகள் என்றும்
உயர்ந்தவை உயர்ந்தவையே!

நெஞ்சம் கனத்துப் போனேன்
உங்கள் அன்பில் விறைத்துப் போனேன்!

என் கண்கள் ஈரமானேன்-எழுத
வார்த்தையின்றிப் போனேன்!

([TamilNet, Monday, 27 June 2011, 02:18 GMT]
Keeping aside party identities, religions and castes, thousands of people of grass root Tamil Nadu gathered in Marina Beach of Chennai on Sunday to remember the genocide committed on Eelam Tamils)

when i watchd this news i felt this poem for Tamilnadu tamilians-Shankar