HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Monday, February 14, 2011

அழகான அந்த நாட்கள்...




அழகான அந்த நாட்கள்...விடுதி வாழ்க்கை....

பத்துவருடங்கள் தாண்டிய-அந்த
பாச வாழ்க்கையைப் பதிய-இந்த
பக்கங்கள் போதாது...
சொல்லியும் தீராது...

சித்தமிருந்தால் மீண்டும்
நித்தம் பிறப்போம்.
பிரிவு தந்த-அந்த
சோகம் திறப்போம்

ஆண்டு கடந்த போதும்-அன்பு
மாண்டு போகவில்லை.
நாடு கடந்த போதும்-நட்பு
நழுவிப் போகவில்லை.

திசைகள் வேறாய்ப் பிரிந்துவிட்டோம்
திக்குத் திக்கை சிதறிவிட்டோம்-அரசு
சிறையிலெம்மை   இட்டபோதும்
நாம் சிறிதும்கூடக்  கலங்கவில்லை.

பழைய-புதுக் கொஸ்ரலென்று-எம்முள்
பட்டாசுச் சண்டைவரும்.
வட-தென்கொரியா மோதல்போல்
அணுகுண்டுச் சத்தம்வரும்.

ஒரு பாசல் கொண்டுவந்தால்
ஒன்பதுபேர் கைபோட்டு-வரும்
ஒருபிடி சோறினன்பு
இனிமேல்த்தான் எப்போதோ?

ஒருவன் சொந்தபந்தம் பார்ர்கவந்தால்.
இரவில் கபெட்டைக் காலிசெய்வோம்.
பணமேதும் தொட்டதில்லை-ஆனால்
பலகாரம் விட்டதில்லை!

பரிட்சைக் காலங்களில்
படிக்கும் இரவுகளில்-நம்
இடைவேளை என்பதே
இளனி பறிப்பதுதான்.

ஒருநாள்..
தென்னைமேலே நான்.
கிழே தியாகராஜா(uncle),
நண்பர்கள் ஓடிஒளிந்து விட்டார்கள்-மேலே
நான்பட்ட பாடு நாய் படாப்பாடு.

இன்னுமொருநாள்...
திடீரென்று தியாகராஜா(uncle)
நாங்கள் ஒர்டிவிட்டோம்-நண்பன்
ஜெயந்தன் மாட்டிக் கொண்டான்.

பின்னர்..
தலையில் கோம்பையோடு-அவன்
வகுப்பு வகுப்பை வலம்வந்தான்
இன்று நினைத்தாலும்
வசிறு வலிக்கச்  சிரிப்புவரும்.

கொட்டும் மழையென்ன!
வேர்க்கும் வெயிலென்ன-நாம்
விளையாடத் தொடங்கிவிட்டால்
காலநிலை கணக்கிலில்லை.

மதில் பாய்ந்து செல்வோம்-ஒருநாள்
மாட்டிக் கொண்டோம்,
அதிபர் அடித்த அடிமட்டும்
இன்னும் நினைவிருக்கு.

அம்மா இல்லையென்ற-கவலை
அடிக்கடி வருவதில்லை.
கைலாசப் பிள்ளையம்மா
கடவுள் தந்த எங்களம்மா!

பள்ளியில் அதிபராய்
விடுதியில் அப்பாவாய்.
அடியும் விழுவதுண்டு
ஆறுதலும் அவரேதான்.

நட்ட நாடு ராத்திரியில்
நாம்தூங்கும் வேளையில்-தூக்கத்தில்
சிரிப்பான் ஒருவன்.
கதைப்பான் இன்னொருவன்

இப்படி நாம் அடிக்கடி
அதிர்ச்சி வைத்தியம் காண்பதுண்டு!

பாழடைந்த கிணற்றுக்குள்
பாய்ந்து நீச்சலடிப்பதுண்டு-ஒருநாள்
நாம் உள்ளாடையோடு ஓடிவிட்டோம்.
பிடிபட்ட ராதாவை-அதிபர்
பிரித்து மேந்துவிட்டார்..:-)

நாங்கள்வைத்த வாழைதென்னை
இன்றும் இருக்கிறது-அன்று
நாங்கள்வைத்த பூமரமும்
இன்றும் பூக்கிறது.

பேக்கரிப் பாண்-சுடச்சுட
முட்டைரொட்டி
பத்துரூபாய்க் கறியோடு
பகிர்ந்துண்டது நினைவிருக்கு.

பட்டப் பெயர்கள்
எமக்குள்ளிருந்தது.
அமைச்சர் பதவிகளும்
எமக்குள்ளிருந்த்தது.

(தொலைத்தொடர்பு சேவைகள் அமைச்சர்-சிவகரன்.
மின்சார சேவைகள் அமைச்சர்-பாரத்.
பறவை விலங்கு வளர்ப்பு அமைச்சர்-ஜெயந்தன்.
ஒழுக்க சீர்கேடு அமைச்சர்- பத்மா.
சிறுவர் நலன்கள் அமைச்சர்- நவநீஷ்.
மருத்துவ சுகாதார அமைச்சர்- மதி
மகளீர் விவகார அமைச்சர்- கேசவன்.
அரசியல் விவகார அமைச்சர்- நான்
உள்விவகார அமைச்சர்-சிவபாலன்.
தோட்ட உட்க்கட்டமைப்பு அமைச்சர்-கோனேஸ்.
சாப்பாட்டு விவகார அமைச்சர்-சஞ்சீவ்.
முஸ்லிம் கலாச்சார அமைச்சர்-ராகுலன்.
வெளிவிவகார அமைச்சர்-ராஜீவ்)

ஒவ்வொரு பதவிக்கும்-உள்ளே
ஆழமான அர்த்தமுண்டு :-).
வெளியே சொன்னால்-எனை
வெட்டிப் போடுவார்கள்:-))))))

''என்ன தியாகராஜா
மாடு புல்லு மேயிதில்லை''-என
ஐயர் சொன்ன அந்த வார்த்தை
இன்னும் நினைவிருக்கு.

எம்மைவிட எங்கள்
தம்பிமார் வீரர்கள்
விளையாட்டுப் போட்டியிலே
வென்றுவரும் சூரர்கள்.

ஆயிரம் சண்டைகள்
எமக்குள் இருந்தாலும்
தம்பியைத் தொட்டவனை
என்றுமே விட்டதில்லை.

அடித்தாலும் பிடித்தாலும்-எமை
பாசத்தோடு படிப்பித்த அண்ணன்மார்-நாம்
இன்று பட்டம்வரை சென்றதற்கு
அவர்கள்தான் அடித்தளம்!

அன்று..
சொந்த அண்ணன் தம்பிபோல
சிரிப்போடு சேர்ந்திருந்தோம்
இன்று...
தனிமையால் தனிமரமாய்
நகருகிறது என்நாட்கள்.

என்னதான் படித்தாலும்!
எவ்வளவுதான் உழைத்தாலும்!
எங்குதான் வாழ்ந்தாலும்-அந்த
அழகான நாட்க்கள்போலே
இனிமேலில்லை! இல்லை! இல்லையே!  :-((((((((((((((((((((((((((


''வாழ்க எம் தேசம்''

யாழ் சங்கர்-கவிதைகள்

4 comments:

  1. நல்லாயிருக்குதுங்க...

    http://mathisutha.blogspot.com/2011/02/blog-post_12.html?utm_source=BP_recent

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு சகோ.. தொடருங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. @ ம.தி.சுதா:
    மிக்க நன்றி. தமிழ் உறவுகளின் ஊக்குவிப்புத் தான் எனது கிறுக்கல்களையும் கவிதைகளாக்க மாற்றும். மிக்க நன்றி.
    கடவுளன்றி என்னால் எதுவுமில்லை...!

    ReplyDelete
  4. @தோழி பிரஷா: உங்கள் ஊக்கு விப்புக்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன்.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே.

    ReplyDelete