HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Thursday, February 3, 2011

பள்ளிப் பருவத்தில்...

பள்ளிப் பருவத்தில்...

கேள்வி மேல கேள்வி கேட்டு
எருமையெனத் திட்டினாலும்

முன்னே கூப்பிடு
முட்டுக் காலில் நிறுத்தினாலும்,

கடைசி வாங்கை  மட்டும்-நாம்
கடைசிவரை விட்டதில்லை .

தனித்தனியே பிரித்து
தள்ளித் தள்ளி இருத்தினாலும்.

அடுத்தபாடத்தில் சேர்ந்திருக்க
ஆவலோடு காத்திருந்தோம்.

பள்ளியால் வரும் வழியில்
பட்டப்பகல் நடுவெயிலில்

சாலையோர மாங்காய்க்கு
சளைக்காமல் எரிந்(த)துண்டு.

ஓட்டில் கல் விழுந்துவிட்டால்
ஓடிய ஓட்டம் ஒலிம்பிக்கிலும் இல்லை.

கரும்பலகை சுவர்களில்
காட்டூன்கள் வரைந்து வைத்தோம்.

வகுப்பறைக் கதிரைகளில்-எம்
பெயர்கள்  செதுக்கி வைத்தோம்.

''நடராஜ்'' கொம்பாசுள்ளே-சாமிப்
படங்கள் ஒட்டிவைத்தோம்.

ஆங்கில வாத்தி வேண்டாமென்று
அப்பப்போ நேர்ந்து கொண்டோம்.

லுமாலா சைக்கிளோட
கிரவல் சாலைகள் கிடங்காகும்
நீலக்காற்சட்டை நிறம் மாறும்.

தொடரும்...

''வாழ்க எம் தேசம்''

யாழ் சங்கர்-கவிதைகள்

2 comments:

  1. நானும் விடுதில்வாழ்தனுபவித்தவன் என்பதாலோ என்னவோ உங்களின் கவிதையின் உண்மையை உணர முடிகிறது. அருமையான நினைவுப்பகிர்வு. நன்றி

    ReplyDelete