HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Thursday, January 13, 2011

கலைஞரின் மரண அறிவித்தல்!

கறுப்புக் கண்ணாடிபோட்ட
கல் மனிதனே!
பொய்கள் கண்ணில்
புலப்பாடுமென்றா
கண்களை மறைக்கிறாய்?

கலைஞர் இருந்தும்-எல்லாம்
எமக்கு எதிராய் நடந்தது!
புரட்சித் தலைவர் இருந்திருந்தால்
இதற்கு எதிர்மாறாய் இருந்திருக்கும்!

மத்தியில் பங்குண்டு!
மாநிலத்தில் ஆட்சியுண்டு!
இத்தனையும் இருந்தன்று!
எம்தலையில் வெடிகுண்டு!

அபிவிருத்தித் திட்டங்கள்
அறிவித்ததும் ''மத்தியால்''!
மறந்துவிட்டீர் எங்களை
பணம்சேர்க்கும் புத்தியால்!

இராமச்சந்திரன்(MGR) இருந்திருந்தால்
ஈழச் சந்திரனும் சிரித்திருக்கும்!
இந்திரனாய் இருந்தும்கூட
ஈழம் இருளாக இருக்கிறதே!

மொழிப்பற்று மட்டும் போதாது
இனப்பற்றும் வேண்டும்-இவை
இரண்டும் இருந்தால்தான் தமிழன்!

பதவி பரிபோனாலுமேன்று
பாராமுகமாய் இருந்தீறென்று!
வரலாறு சான்றுபகரும்நின்று!

காந்திவழியில் விடுதலை வென்றீர்
எமக்குயேன் ஆயுதம்தந்தீர்?
காந்தியுங்கள் தந்தைஎன்ரீர்
திலீபனையேன் கொன்றீர்?

ஒட்டுத்துணியின்றி கைகளால்
மானம்காத்துக் கதறுது
எம்தமிழ் அன்று!
ஓட்டநின்று கிரீடம் சூட்டினார்
செந்தமிழென்று!


-2009
''வாழ்க எம் தேசம்''

யாழ் சங்கர்-கவிதைகள்


7 comments:

  1. அற்புதமாக எமது உளகிடக்கைகளை கவிதை நடையில் எடுத்து வைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  2. படிக்கவேண்டியவர்கள் கண்களில் பட்டால் பரவால்லை.

    ReplyDelete
  3. @thampi Jojaa.. thanx daa stdy wel. god blss u

    ReplyDelete
  4. பாஸ்!
    எம்.ஜி.ஆரை சொன்னிங்க ஓகே. புரட்சிகலைஞரை எல்லாம் ஏன் இதுல கொண்டுவர்ரிங்க

    //காந்திவழியில் விடுதலை வென்றீர்
    எமக்குயேன் ஆயுதம்தந்தீர்?//

    நெத்தியடியான கேள்வி. யாரும் இதுவரை கேட்காத கேள்வி.

    ReplyDelete
  5. in 2011 Karunanithi wil die.. in 2011 Karunanithi wil die..

    ReplyDelete
  6. @Murukesan..மன்னிக்கவும் நண்பரே, நான் புரட்சிக் கலைஞர் என்பது MGR என்று நினைத்து விட்டேன்..:-)

    ReplyDelete