HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Tuesday, January 11, 2011

என் தாய் மண்ணில்....

புறப்பட்ட இன்பம்
அடைந்ததும் இல்லை-என்
தாய் மண்ணில்.

அங்கே....
குடிசைகள் குறைகிறது
கல்லறைகள் குடியேறுகிறது....!

வரவேற்பு பதாகையில்
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி..!

விதவைக் கோலத்தில்
தோழிகள்!
வீட்டு முற்றத்தில்
பதுங்கு குழி!

நண்பனை வினாவியபோது
குனிந்ததலை நிமிர்ந்த தாயின் முகத்தில் கண்ணீர்...!

அன்று நண்பர்களோடு....
மாலையில் பறவைகளாய் ஒன்று சேர்ந்த
குட்டிச்சுவர், வேப்பமரம்!
வெட்டு-வேட்டுக் காயங்களோடு...!

அங்கு...
பறவைகள் இல்லை
வேட்டு சத்தங்களால்
விரட்டியடிக்கப் பட்டதுவோ?

அதிகாலை ஊர் அடைந்ததும்
அழைத்துப் போக யாருமில்லை
ஊரடங்கு முடியவில்லையாம்...!

பாடசாலைச் சீருடையில்
பாண் வேண்டிப்போகும் சிறுமி
எனக்குப் புதுமுகம்-ஆனால்
அறிந்த முகத்தின் சாயல்.

நண்பர்கள் வீடுசெல்ல
எனது வீட்டில் அனுமதியில்லை!
பார்த்துப் பழகிய
பழைய முகங்களை பார்க்க முடியவில்லை
நினைவிலும் மீட்டக முடியவில்லை.

மூலை முடுக்கெங்கும் காவலரண்கள்பாதுகாப்புப் படைகள்-ஆனால்
எனது பாதுகாப்புக்கு பயப்படும் உறவுகள்
விந்தை விளங்கவில்லை எனக்கு?

எனது மண்ணில்...
எனது ஊரில் ஏன் இப்படி?
மதியமாகியும் வீதியில் எவருமில்லை.
வேலைக்கு சென்றார்களோ?
வெளிநாடு சென்றார்களோ?

வீதியை வெறித்துப் பார்த்தபடி-அவர்கள்
காணாமல் போவதரியாது சிந்தனையில் நான்!!!!

பிள்ளையார்கோவில் தாத்தா இல்லை!
கடலைவிற்ற (கடனாகவும்) பாட்டியில்லை!
கோவில் மதிலுடைத்துக் கட்டிய காவலரண்.

அசைக்கமுடியாமல் இறுகிப்போன
கோவில் மணி-அன்று
அலாரமாய் படிக்க உதவியது ஞாபகத்தில்..!

அன்று...
பாட்டியின் மரணச்சடன்கிலும்-எனை
சிரிக்க வைத்த நண்பன்!
மாதாகோவில் திருவிழாவில்-போலி
மணிக்கூடு திருடியது!
பட்டாசு வேண்ட
பால்கறந்து விற்றது!
சுடலை கடந்து-அவன்
வீடு செல்லப் பயந்து
பாடிக்கொண்டே கடந்த்தது!
இவைகளை நினைவில் மீட்டபடி
நண்பனின் வீடு நோக்கி நான் ...!

சுடலை நெருங்கியது...
இடையில் எதோ பார்வையில்
அடிக்கடி உச்சரித்த பெயர்...?

அது... சூட்டுக் காயங்கள் பட்ட
சிறு சுவர் தெளிவில்லை.
உற்றுப் பார்த்தபோது
ஒருகணம் என்னிலை மறந்தேன்
அகால மரணமென அவன் பெயர் கல்லறையில்.
அதுவரை யாருக்காகவும் அப்படி அளுததில்லை.... தொடரும்


யாழ் சங்கர்

1 comment:

  1. wow.....ரொம்ப ரொம்ப அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete