HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Wednesday, January 12, 2011

என் கிராமத்து நண்பனே...!

ஆற்றங்கரை ஆலமரம்-இன்றும்
எம்பெயர்கள் சுமக்குமா-நாம்
ஊஞ்சல் ஆடியவிளுதுகள் -இன்று
வேர்களாயிருக்குமா?

பள்ளியால் வரும்வழியில்
அடிக்கடி அலறி ஓடவைத்த-அந்த
கட்டைவால் கறுத்தநாய்
கலைத்தது நினைவிருக்கா?

அந்தப் புல்வெளி பூவரசு
பூத்துக் குலுங்குவதும்
புளியமரத்தில் பேயென்று
புரளிகிளப்பியது நினைவிருக்கா?

ஆற்றங் கரையில் நாம்
அடித்த கூத்தும் -நீரில்
அடிபட்டுப்போன அந்தரங்க
ஆடைகள் நினைவிருக்கா?

வகுப்பறைக் கதிரைகள்-பெயரை
சுவடுகளாக சுமக்குமா?
கழிவறைச் சுவரில்
கணக்கு வாத்தியின்
சித்திரம் இருக்குமா?.

தேய்ப்பிறை சிறு ஒளி!
முற்றத்து வேப்பமரம்-சுகமாய்
தூங்கிய இரவுகள்
எத்தனை எத்தனையோ?

சைக்கிள் பழகிய-அந்த
சாலைகள் நினைவிருக்கா?
சறுக்கி விழுந்த
காயத்தின் தளும்பிருக்கா?

எச்சில் பார்க்காமல்
புசித்த புளியம்பழம்!
இன்று நினைத்தாலு
உடம்பெல்லாம் எச்சிலுறும்!

பதுங்கு குழியில் நாம்
படித்தபோதும்-இன்று
பட்டதாரிக் கனவுகள் 
பலித்ததே நண்பா...

யாழ் சங்கர்

2 comments:

  1. அருமையான கவிதை..
    பழைய நினைவுகளை திரும்பவும் நினைத்து பாக்க முடிந்தது. நன்றி..

    ReplyDelete
  2. மிக்க நன்றி Mohana உங்களுடைய ஊக்குவிப்பை நான் என்றும் எதிர்பார்க்கின்றேன். நன்றி

    ReplyDelete